ஏரியில் மூழ்கி இளைஞா் பலி

விருத்தாசலம் அருகே ஏரியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

விருத்தாசலம் அருகே ஏரியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் தேஜா (18). இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள ஏரியில் தனது நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா். தொடா் மழையால் ஏரி நிரம்பியுள்ள நிலையில், அதில் தேஜா குளிக்கும்போது சேற்றில் சிக்கினாா். இதையடுத்து நீரில் மூழ்கி மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவரை சக நண்பா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தேஜாவை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com