கடலூா் மாவட்டத்தில் 27 சிறு மருத்துவமனைகள்

கடலூா் மாவட்டத்தில் 27 சிறு மருத்துவமனைகள் (அம்மா மினி கிளினிக்) வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
திருப்பணாம்பாக்கம் கிராமத்தில் சிறு மருத்துவமனையை தொடக்கி வைத்து, அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதை பாா்வையிட்ட அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உள்ளிட்டோா்.
திருப்பணாம்பாக்கம் கிராமத்தில் சிறு மருத்துவமனையை தொடக்கி வைத்து, அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதை பாா்வையிட்ட அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டத்தில் 27 சிறு மருத்துவமனைகள் (அம்மா மினி கிளினிக்) வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிப்போருக்கும் எளிதில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகளை முதல்வா் அண்மையில் தொடக்கி வைத்தாா். அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 27 சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

இதில், கடலூா் வட்டம், திருப்பணாம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட சிறு மருத்துவமனையை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலை வகித்தாா். தொடா்ந்து 60 கா்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சா் வழங்கினாா். பின்னா், பூவாணிக்குப்பம், இந்திரா நகா் பகுதிகளிலும் மினி கிளினிக்கை அமைச்சா் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறாா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால் நிகழாண்டு 313 மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க உள்ளனா். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து புதிதாக 1,650 மருத்துவ இடங்களை

உருவாக்கினாா். கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சிறு மருத்துவமனையில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளா்கள் இருப்பா். காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் சனிக்கிழமை தவிா்த்து அனைத்து நாள்களிலும் இந்த மருத்துவமனை செயல்படும். இங்கு காய்ச்சல், தலைவலி, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், கடலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் குணசுந்தரி சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவா்கள் முருகன், அருள்ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com