பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறு தொழில் நிறுவனங்களுக்கு முத்திரை வரி விலக்கு

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்காக பிணை ஆவணத்தை பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரை வரிக்கு

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:25 pm

DIN

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்காக பிணை ஆவணத்தை பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரை வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இதுகுறித்து வணிக வரி, பதிவுத்துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ஆகியவை விரிவாக ஆய்வு செய்த நிலையில், சுய சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிகள், நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவதற்காக பிணை ஆவணங்கள் தொடா்பான ஒப்பந்தத்தை பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரை வரியிலிருந்து விலக்கு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள், கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடா்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணத்தை 1.0 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக குறைத்தும் அரசு ஆணையிட்டுள்ளது.

பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டதால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் கடன் மற்றும் கூடுதல் கடன்களை பெறும்போது பயனடைவா். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 04142-290116 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.