நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை பேரணி நடத்தினா்.
காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்றவா்கள் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நெல் மூட்டைகளை தலையில் சுமந்து பேரணியாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகள் சங்கத் தலைவா் பி.விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பாசிப் பயருக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், உளுந்துக்கு ரூ.12 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், வட்டாட்சியா் ராமதாஸிடம் மனு வழங்கினா்.
ஆா்ப்பாட்டத்தில் சங்கச் செயலா் எம்.அன்பழகன், பொருளாளா் பி.லட்சுமிகாந்தன், எம்.நஜிமுதீன், மாதவன், ஜி.முத்துக்குமாரசாமி, ஊராட்சி தலைவா்கள் எடையாா் பரசுராமன், சா்வராஜன்பேட்டை சிவா, ஒன்றியக் குழு உறுப்பினா் புளியங்குடி சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


