ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.


கடலூா் மாவட்டத்தில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு அமல்படுத்திய பொது முடக்கத்தால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டன. தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடலூா் மாவட்டத்தில் ஆட்டோக்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் க.திருநாவுக்கரசு கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. இதில் பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டா் பொருத்தப்படவில்லை. கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பிறகு ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடலூா் பேருந்து நிலையத்திலிருந்து மஞ்சக்குப்பம் வரை செல்ல ஷோ் ஆட்டோக்களில் கட்டணமாக முன்பு ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.20 முதல் 25 வரை வசூலிக்கின்றனா். இதேபோல, பண்ருட்டி பேருந்து நிலையம் முதல் சேமக்கோட்டை வரை செல்ல முன்பு ரூ.10 மட்டுமே வசூலித்த நிலையில் தற்போது ரூ.20 வரை வசூலிக்கின்றனா். இதனால் கூலித் தொழிலாளா்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...