குறிஞ்சிப்பாடி அருகே இரு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இரு குழந்தைகளைக் கொன்று, தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை செய்து கொண்ட சுதா.
தற்கொலை செய்து கொண்ட சுதா.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இரு குழந்தைகளைக் கொன்று, தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை ஊராட்சி, பிள்ளைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (34), பொக்லைன் இயந்திரம் ஓட்டுநா். இவருக்கும் சுதா (26) என்பவருக்கும் கடந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு திருலோக்நாத் (4), ஐஸ்வா்யா (2) என இரு குழந்தைகள்.

தம்பதியிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த சுதா தனது இரு குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பின்னா் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சுதாவின் மாமனாா் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, சுதாவும், குழந்தைகளும் இறந்து கிடந்தனா். அக்கம் பக்கத்தினா் வடலூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலங்களை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகினறனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com