கடலூா்: மேலும் 17 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
Published on


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,571-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 17 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,189-ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை உயிரிழப்பு இல்லாததால் மொத்த பலி எண்ணிக்கை 281-ஆக உள்ளது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 71 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 30 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிய நிலையில், 653 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com