சிதம்பரம் கடலூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில கோரிக்கை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை வகித்து பேசினார். நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா வரவேற்றார். அரசு பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் வே.மணிவாசகம், பி.மகாமணி, பல்வேறு அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் எம்.கிருஷ்ணன், பி.பெரியசாமி, ச.ராமச்சந்திரன், ம.கோதண்டம், கோ.சீனுவாசன், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.பிச்சமுத்து, சத்துணவு பணியாளர் சங்க ர.ஞானஜோதி, அங்கன்வாடி பணியாளர் சங்க என்.ஆர்.கவிதா, மற்றும் வெ.சிவக்குமார், டி.ஜெய்கணேஷ், ஆர்.சாமிநாதன், துரை.சேகர், கு.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மாநில பொருளாளர் எஸ்.சாகுல்அமீது நன்றி கூறினார்.