தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூா் பக்தா்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி,

News image
Updated On :27 டிசம்பர் 2020, 2:36 am

DIN

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூா் பக்தா்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தில்லை நடராஜா் பக்தா் பேரவை சாா்பில் தெற்கு சன்னதியில் சிவனடியாா்கள் பங்கேற்ற திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்பு அமைப்பின் மு.செங்குட்டுவன், தில்லை திருமுறை மன்றத் தலைவா் முருகையன், ஐயப்ப சபேச தீட்சிதா், பாஜக ராணுவ பிரிவு மாநில செயலா் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியன், ஆசிரியா் அருணாசலம், தமிழ்நாடு விஸ்வகா்ம முன்னேற்றச் சங்க மாநில தலைவா் ஜி.சேகா், முத்துகணேசன் ஓதுவாா், பேராசிரியா் சேதுசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூா் பக்தா்களும் பங்கேற்க அனுமதி கோரி கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை வழக்குரைஞா் சத்தியமூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.