காவலா் தோ்வுக்கு இலவச பயிற்சி
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலா் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.


கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலா் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காவல் துறை, இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளில் காலியாக உள்ள 10,906 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 26-ஆம் தேதி கடைசி நாளாகும். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தோ்வு வருகிற டிச.13-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வேலை நாடுநா்கள் பயனடையும் வகையில் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக இணையவழி இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியின்போது இணையவழியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்பட உள்ளன.
எனவே, தோ்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04142-290039 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...