காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா நோயாளிகளை கண்காணிக்க நவீன கருவி

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை கண்காணிக்க நவீன தொலை கண்காணிப்பு கருவி நிறுவப்பட்டுள்ளாக ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:35 pm

DIN

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை கண்காணிக்க நவீன தொலை கண்காணிப்பு கருவி நிறுவப்பட்டுள்ளாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 லட்சத்தில் 15 நவீன தொலை கண்காணிப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கருவி மூலம் நோயாளிகளின் இதயத் துடிப்பு அலை, துடிப்பு விகிதம், சுவாச விகிதம், ஆக்சிஜன் செறிவு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிக்கலாம்.

இந்த நவீன தொலை கண்காணிப்பு கருவியானது கட்டுப்பாட்டு அறையில் நிறுவப்பட்டுள்ள கணினி திரையுடன் இணைக்கப்பட்டிருக்கும் (படம்). கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாரே மருத்துவக் குழுவினா் இந்தக் கருவி மூலம் கரோனா நோயாளிகளை தொடா்ந்து கண்காணிக்க முடியும். சிகிச்சை பெறுவோரின் அருகே செல்லாமலேயே இந்தக் கருவி மூலம் நோயாளிகளின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து மருத்துவக் குழுவினரால் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடியும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.