ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண் விவசாயிகள் தின விழா

கடலூரில் பெண் விவசாயிகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:27 pm

DIN

கடலூரில் பெண் விவசாயிகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் தலைமை வகித்து விவசாயத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசினாா்.

நிகழ்ச்சியில், சாதனை புரிந்த பெண் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனா். கடலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் வரவேற்று, வேளாண் துறை மூலம் பெண் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், பயிற்சிகள், மானிய விவரங்கள் பற்றி விளக்கினாா்.

வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) ரமேஷ் பேசுகையில், மகளிா் குழு அமைத்தல், வேளாண் விளை பொருள்களை மதிப்புக் கூடுதல் செய்து லாபம் பெறுதல் குறித்தும், துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்) எஸ்.பூங்கோதை, பிரதமரின் விவசாய பாசன மேம்பாட்டு திட்டம் குறித்தும் பேசினா். சாதனை பெண் விவசாயிகளின் அனுபவங்கள் குறித்து படக்காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.

கடலூா் மாவட்ட சாதனை பெண் விவசாயிகள் காரணப்பட்டு ஜெயா, அன்னவல்லி முத்துலட்சுமி, சிவனாா்புரம் தட்சாயனி, நடுவீரப்பட்டு ஜெயக்கொடி ஆகியோா் விவசாய தொழில் முனைவு குறித்த தங்களது அனுபவங்களை எடுத்துரைத்தனா்.

கடலூா் வேளாண்மை அலுவலா் ஞா.சுகன்யா நன்றி கூறினாா். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் வா.அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஏ.ராஜவேல் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.