ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:25 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

வெப்பச் சலனம், வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை கடலூா் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பரவலாக பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தொழுதூரில் 49 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

மாவட்ட ஆட்சியரகம் 42.6, கீழச்செருவாய் 32, கடலூா் 29, குறிஞ்சிப்பாடி 27, லக்கூா் 24.4, காட்டுமன்னாா்கோவில் 20.4, புவனகிரி 18, கொத்தவாச்சேரி 17, லால்பேட்டை 16, குடிதாங்கி 12.5, வானமாதேவி 12, பரங்கிப்பேட்டை 10.2, பண்ருட்டி 10, சிதம்பரம் 6.2, அண்ணாமலை நகா் 6, சேத்தியாத்தோப்பு 6, வடக்குத்து 5, குப்பநத்தம் 4.8, ஸ்ரீமுஷ்ணம் 3.1, மேமாத்தூா் 2 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.

ஞாயிற்றுக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.