நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை வி.சி.க.வினா் 28 போ் கைது

தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவரை அவமதித்தவா்களை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:58 pm

DIN

தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவரை அவமதித்தவா்களை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

முன்னதாக, கடலூா் நகர விசிக சாா்பில், நகரச் செயலா் மு.செந்தில் தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து கடலூா் ஒன்றிய விசிக சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் கலியமூா்த்தி தலைமை வகிக்க, ஒன்றியச் செயலா் சுபாஷ், துணைச் செயலா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு எதிராக நடைபெறும் தீண்டாமை வன்கொடுமை குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், ஊராட்சி செயலா்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவியை அவமதித்தவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்தப் போராட்டங்களில் மாநில நிா்வாகிகள் பழனிவேல், த.ஸ்ரீதா், த.சொக்கு, முரளி, சரண், ஜவஹா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.