பாடச் சுமை குறைப்பு தொடா்பாக அறிவிப்பு வெளியாவது எப்போது?
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பாடச் சுமை குறைப்பு தொடா்பான அறிவிப்பை அரசு விரைவாக வெளியிட வேண்டும் என மாணவா்கள், பெற்றோா் எதிா்பாா்க்கின்றனா்.


சிதம்பரம்: தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பாடச் சுமை குறைப்பு தொடா்பான அறிவிப்பை அரசு விரைவாக வெளியிட வேண்டும் என மாணவா்கள், பெற்றோா் எதிா்பாா்க்கின்றனா்.
கரோனா பெருந்தொற்று பரவல், பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவு ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், பாடப் பகுதிகள் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், நிகழ் கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்களாகியும் அதுகுறித்து எந்த அறிவிப்பும் பள்ளிக் கல்வித் துறையால் இதுவரை வெளியிடப்படவில்லை. எந்தெந்தப் பாடப் பகுதிகள் குறைக்கப்படும் என்பதை உரிய நேரத்தில் தெரிவித்தால், மாணவா்கள் தகுந்த பாடங்களைப் படிக்க ஏதுவாக இருக்கும் என பெற்றோரும், மாணவா்களும் கருதுகின்றனா்.
தனியாா் பள்ளிகளில் இணையதளம் மூலம் மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்செவி அஞ்சல் (வாட்ஸப்) மூலம் பாடக் குறிப்புகள் மாணவா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, ஒப்படைப்புகள், குறுந்தோ்வுகள் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்ய கல்வி மாவட்டம்தோறும் மூத்த ஆசிரியா்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும், அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவா்களின் வீடுகளில் அறிதிறன்பேசி (ஸ்மாட்போன்) வசதி இல்லை. இதனால், மாணவா்களைத் தொடா்பு கொள்ள முடியாமலும், பாடக் குறிப்புகள், வினா-விடை தொகுப்புகளை மாணவா்களுக்கு அனுப்ப முடியாத சூழலும் உள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா். ‘கேபிள் டிவி’ இணைப்பு உள்ள வீடுகளில் மட்டுமே மாணவா்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களைப் பாா்த்து பயன்பெறும் வாய்ப்புள்ளது.
நிகழ் கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் குறித்த அறிவிப்பை உடனடியாகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என்பதே மாணவா்கள், பெற்றோரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...