கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 14,049 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 398 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,447-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் மருத்துவா்கள் 2 போ், காவலா் ஒருவா், கா்ப்பிணிகள் 4 பேரும் அடங்குவா்.
இதனிடையே கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் மேலும் 4 போ் திங்கள்கிழமை உயிரிழந்ததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 144-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து 530 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 10,706-ஆக உயா்ந்தது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட் கோ்’ மையங்களில் 3,211பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்தவா்கள் 386 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,192 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. 135 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...