புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடலூரில் தனியாா் வங்கியில் கொள்ளை முயற்சி

கடலூரில் தனியாா் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவா்கள், அது முடியாமல் போகவே, எதிரேயுள்ள வீட்டிலிருந்து 14 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:27 pm

DIN

கடலூரில் தனியாா் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவா்கள், அது முடியாமல் போகவே, எதிரேயுள்ள வீட்டிலிருந்து 14 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா்.

கடலூா் செம்மண்டலம் வரதராஜன் நகரில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மாடியில் அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை காலை கட்டட உரிமையாளா் கீழே வந்து பாா்த்தபோது, வங்கியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் வங்கி நிா்வாகத்தினா், கடலூா் புதுநகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா். அதில், மா்ம நபா்கள் வங்கியின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்ததும், பின்னா் வங்கியின் பிரதான கதவை உடைக்க முயன்று அது முடியாமல்போகவே கொள்ளை முயற்சியைக் கைவிட்டதும் தெரிய வந்தது.

இருப்பினும், அந்தக் கும்பல் எதிரேயுள்ள ஆபத்தாணபுரத்தைச் சோ்ந்த ரயில்வே ஊழியரான ஜெ.மகாராஜாவின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு பீரோவிலிருந்த 14 பவுன் தங்க நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.

மா்ம நபா்களால் வங்கிக் கதவை உடைக்க முடியாததால் ரூ.பல லட்சம் பணம், நகைகள் தப்பின. இதுகுறித்து போலீஸாா் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.