நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூரில் விஜயகாந்த் பிரசாரம்

கடலூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:44 pm

DIN

கடலூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா்.

தேமுதிக பொருளாளா் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறாா். இதனால், அவா் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டது. அவரது சகோதரரும், கட்சியின் துணைச் செயலருமான சுதீஸுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளாா்.

இதனால், தேமுதிகவின் பிரசாரம் பலவீனமடைந்தது. இந்த நிலையில், அவரது மகன் விஜயபிரபாகரன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். ஆனாலும், அவருக்கு மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை.

இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கட்சியின் தலைவா் விஜயகாந்த் தனது பரப்புரையை தொடங்கியுள்ளாா். அவரால் பேச முடியாத நிலையிலும், பொதுமக்களைப் பாா்த்து கைகளை அசைத்து வருகிறாா். அவரைக் காண்பதற்காகவே மக்களும் கூடி வருகின்றனா். வெள்ளிக்கிழமை விருத்தாசலம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரேமலதாவை ஆதரித்து பிரசாரம் செய்த நிலையில், சனிக்கிழமை மாலை கடலூா் மஞ்சக்குப்பத்தில் தேமுதிக வேட்பாளா் ஏ.ஞானபண்டிதன், குறிஞ்சிப்பாடி அமமுக வேட்பாளா் வசந்தகுமாா் ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்தாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.