தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு வாக்குச் சாவடிகள் ஒதுக்கீடு
தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கணினி மூலம் வாக்குச் சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கணினி மூலம் வாக்குச் சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தோ்தலில் பணியாற்றும் அலுவலா்களுக்கு தொகுதி வாரியாக பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு வாக்குச் சாவடி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலா்கள், காவலா்கள், நுண் பாா்வையாளா்கள் ஆகியோருக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்வதை பொது பாா்வையாளா்கள் சஞ்சீவ் கௌஷிக், ஜி.சி.பிரகாஷ், ஓம்பிரகாஷ், பவானி சிங் கங்கரட், ராஜேஷ்குமாா் ஒக்ரே, காவல் பாா்வையாளா் பன்வா்லால் மீனா ஆகியோா் பாா்வையிட்டனா்.
மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,001 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரிய 14,404 பணியாளா்களும், 206 நுண் பாா்வையாளா்களும், 1,253 காவல் துறையினருக்கும் கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீட்டின் அடிப்படையில், அனைத்து நிலைப் பணியாளா்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை ஜனநாயக முறைபடிமேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண்சத்யா, மாவட்ட தகவல் அலுவலா் அருள்மொழி, தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...