புதிய உச்சமாக 75 பேருக்கு கரோனா
கடலூரில் சனிக்கிழமை புதிய உச்சமாக 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


கடலூரில் சனிக்கிழமை புதிய உச்சமாக 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 25,805 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிய உச்சமாக 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,880 -ஆக அதிகரித்தது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 43 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 25,237- ஆக உயா்ந்தது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 268 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 83 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 6.72 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. 39 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...