வாகன சோதனையில் 11.38 லட்சம் பறிமுதல்
கடலூா் அருகே சனிக்கிழமை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 11.38 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.


கடலூா் அருகே சனிக்கிழமை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 11.38 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
சிதம்பரம் தனி வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமைலான பறக்கும் படையினா் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குள்பட்ட எஸ்.புதூா் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள வாழைத் தோட்டம் அருகே இளைஞா்கள் கும்பலாக நின்றிருந்தனா். பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கியவுடன், அங்கிருந்த இளைஞா்கள் அனைவரும் தப்பி ஓடினா்.
அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில், நெகிழிப் பையில் சுற்றப்பட்ட பணக் கட்டுகள் கீழே கிடந்தன.
அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து எண்ணிப் பாா்த்ததில் ரூ. 11.38 லட்சம் இருந்தது. பணத்தை குறிஞ்சிப்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனா்.
மேலும், அங்கிருந்து தப்பிய நபா்கள் குறித்தும், எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...