பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா
கடலூா் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.


கடலூா் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 183 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும், 29 வாக்குச் சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் காவல்துறையினருடன், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், அந்த வாக்குச் சாவடி மையங்களை முழுமையாக கண்காணித்திடும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்திட இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள 212 வாக்குச் சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை அந்தந்த தொகுதி மற்றும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...