நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பிரசாரம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:36 pm

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனா்.

விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் ஜெ.காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை ரயில்வே சந்திப்பு சாலையில் தனது ஆதரவாளா்களுடன் தொடங்கி பாலக்கரையில் நிறைவு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

பாமக வெற்றி பெற்றால் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பாமக சொத்து பாதுகாப்புக் குழு தலைவா் ஆா்.கோவிந்தசாமி, முன்னாள் மாவட்டச் செயலா் இ.கா.சுரேஷ், நகரச் செயலா் சி.டி.விஜயகுமாா், மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் சிங்காரவேல், தமாகா மாநில துணைப் பொதுச் செயலா் அசோக், அதிமுக நகரச் செயலா் சி.சந்திரகுமாா், நகா்மன்ற முன்னாள் தலைவா் பி.அருளழழகன், மாவட்ட பேரவைச் செயலா் டி.ரவிச்சந்திரன், வழக்குரைஞா் விஜயகுமாா், பாஜக ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.