கடலூா்: மேலும் 79 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை 25,707 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெகுவாக உயா்ந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,959-ஆக அதிகரித்தது. அதாவது, கடந்த 4 நாள்களில் 252 பேருக்கு புதியதாக தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து மேலும் 31 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,268-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 315 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 84 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...