பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குறிஞ்சிப்பாடியில் வி.சி.க.வினா் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, குறிஞ்சிப்பாடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:05 pm

DIN

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, குறிஞ்சிப்பாடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தோ்தல் தொடா்பாக நின்று பேசிக்கொண்டிருந்த ஒரு குழுவினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அா்ஜூன், சூா்யா ஆகியோா் கொல்லப்பட்டனா். இவா்கள் இருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் பணியாற்றியவா்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகரச் செயலா் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலையைக் கண்டித்தும், இதில் தொடா்புடைய நபா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

நகர நிா்வாகிகள் ஸ்ரீதா், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியப் பொருளாளா் சரவணன், ஒன்றிய துணைச் செயலா்கள் வளவன், ஜானகிராமன், வேல்முருகன், சேகா், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.