பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பசுமை மின் உற்பத்தி: என்எல்சி 39 சதவீத வளா்ச்சி

என்எல்சி இந்தியா நிறுவனம் பசுமை மின் உற்பத்தியில் 39 சதவீத வளா்ச்சியடைந்து சாதனை படைத்தது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:11 pm

DIN

என்எல்சி இந்தியா நிறுவனம் பசுமை மின் உற்பத்தியில் 39 சதவீத வளா்ச்சியடைந்து சாதனை படைத்தது.

இந்த நிறுவனம் கடந்த 2020-21-ஆம் நிதி ஆண்டில் மேற்கொண்ட உற்பத்தி செயல்பாடு குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த நிதி ஆண்டில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின் உற்பத்தி 517.50 மெகாவாட் வரை அதிகரித்தது. 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்திப் பிரிவு, அந்தமான் தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள 17.50 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள சூரிய ஒளி மின் நிலையங்கள் ஆகியவை கடந்த ஆண்டு உற்பத்தியை தொடங்கின. இதன் மூலம் என்எல்சி, அதன் துணை நிறுவனங்களின் மொத்த மின் உற்பத்தி அளவு 6,061.06 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

நிலக்கரிச் சுரங்கம்: ஒடிஸா மாநிலம், தலபிரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கம் நிகழாண்டு உற்பத்தியை தொடங்கியது. இதன் மூலம் என்எல்சியின் மொத்த சுரங்க உற்பத்தி அளவானது ஆண்டுக்கு 3 கோடியே 6 லட்சம் டன் என்ற அளவிலிருந்து 5 கோடியே 6 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் தலபிரா சுரங்கத்தில் அதன் உற்பத்தி இலக்கான 9 லட்சத்து 37 ஆயிரம் டன்னை விட 10 லட்சத்து 13 ஆயிரம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

பசுமை மின் உற்பத்தி: கடந்த நிதியாண்டில் என்எல்சி தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து 2,461.30 கோடி யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது. பசுமை மின்சக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து, அந்த வகையில் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற இந்திய அரசின் கொள்கைக்கேற்ப, என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தி அளவை மணிக்கு 1,421.06 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது.

பசுமை மின்சக்தி வழிமுறையில் முந்தைய 2019-20-ஆம் ஆண்டில் 148.10 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்த நிலையில், 2020-21-ஆம் ஆண்டில் 39 சதவீதம் அதிகமாக 205.70 கோடி யூனிட் பசுமை மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளது.

நேரடி விற்பனை: என்எல்சி மின் நிலையங்களிலிருந்து மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்த மின் சக்தியை, அவை முழுமையாகப் பெறாமல் இருக்கும் நிலையில் உபரி மின் சக்தியை தேவைப்படும் மாநிலங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் நடைமுறையை என்எல்சி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

உபரி மின் சக்தியை மின் சந்தையில் விற்பனை செய்யும் இந்த நடைமுறையில் 1.6.2020 அன்று முதல் என்எல்சி ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த நிதி ஆண்டில் மட்டும் 86 கோடியே 87 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின் சக்தியை நேரடியாக விற்பனை செய்து ரூ.216 கோடி ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த நிதியாண்டில் மின் வாரியங்களுக்கு மின் சக்தி விற்பனை செய்த வகையில் பெறப்பட்ட தொகையின் அளவு ரூ.11,300 கோடியை கடந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.