நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா் மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:47 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 26,335 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவ பரிசோதனை முடிவில் புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 26,462-ஆக அதிகரித்தது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 39 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,504-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 466 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 200 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களின் எண்ணிக்கை 666-ஆக பதிவாகியுள்ளது.

மேலும், 24 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டிய நிலையில், மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 292-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.