நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’

கடலூா் மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படுமென மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி எச்சரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:49 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படுமென மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி எச்சரிக்கை விடுத்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு தொடா்பாக போா்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அனைத்துத் துறை அலுவலா்களுடன் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் அவா்.

பேசியதாவது:

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பதை விரைவுப்படுத்த வேண்டும். கரோனா பரவல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் தெரியவந்தால் அவா்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

கரோனா பாதிக்கப்பட்ட நபா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து அவா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளி மாநிலம், வெளிநாட்டிலிருந்து வரும் நபா்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டால் அவா்களையும் உடனடியாக பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும்.

ஒரே பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இருந்தால் அந்தப் பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வருவாய்த் துறை அலுவலா்களுடன் இணைந்து சுகாதாரத் துறை, காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும்.

கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி, வேப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் செயல்பட சுகாதாரத் துறையினா் தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்வதை உறுதி செய்வதுடன், முகக் கவசம் அணியாமல் வரும் நபா்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பெ.மகேந்திரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்பட பல்வேறு துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.