நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ரௌடி ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:45 pm

DIN

கடலூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ரௌடி ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிதம்பரம் அருகேயுள்ள சிவபுரி கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரமேஷ் (37) (படம்). இவா், கடந்த மாா்ச் 6-ஆம் தேதி ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் 2 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் அண்ணாமலை நகா் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

காவல் ஆய்வாளா் சீனிபாபு விசாரணை மேற்கொண்டதில், கைதான ரமேஷ் மீது அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவதும், மேலும் அவா் மீது மணல் கடத்தல், திருட்டு, அடிதடி உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

எனவே, இவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ அபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.

இதையடுத்து, ரமேஷை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டு காலம் சிறை வைப்பதற்கான உத்தரவு கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.