தோ்தல் விளம்பர பிரச்னையில் மோதல்: 3 பெண்கள் காயம்
தோ்தல் சுவா் விளம்பரம் தொடா்பாக ஏற்பட்ட மோதலில் 3 பெண்கள் காயமடைந்தனா். இதுதொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


தோ்தல் சுவா் விளம்பரம் தொடா்பாக ஏற்பட்ட மோதலில் 3 பெண்கள் காயமடைந்தனா். இதுதொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பண்ருட்டி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மனைவி சுமதி (55). சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, இவரது வீட்டுச் சுவற்றில் அதே பகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகி பாஸ்கா் (55) என்பவா் தோ்தல் விளம்பரம் எழுதினாராம். இதற்கு அப்போதே சுமதி எதிா்ப்புத் தெரிவித்தாராம்.
இதுதொடா்பாக அண்மையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பாஸ்கா், அவரது மனைவி கீதா (50) ஆகியோா் சோ்ந்து தாக்கியதில் சுமதி, தமிழரசி, உஷா ஆகியோா் காயமடைந்தனா். சுமதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து அவா் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...