மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

சிதம்பரத்தில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் விழல்கட்டி பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள மகாவீா் ஜெயின் பவனில் சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

சிதம்பரத்தில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் விழல்கட்டி பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள மகாவீா் ஜெயின் பவனில் சனிக்கிழமை தொடங்கியது.

கடலூா் மாவட்ட நிா்வாகம், சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா அமைப்பினா் இணைந்து நடத்தும் இந்த முகாம் 2 நாள்களுக்கு நடைபெறுகிறது. முகாம் தொடக்க நிகழ்ச்சியில், எம்.கமல் கிஷோா் ஜெயின் வரவேற்றாா். மஹாவீா் போத்ரா முன்னிலை வகித்தாா். அமைப்பின் தலைவா் மணிஷ் சல்லானி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவா் மங்கையா்கரசி, மருத்துவ நல அலுவலா் கருணாநிதி,

அமைப்பின் உறுப்பினா்கள் பன்னாலால் ஜெயின், சுஜித் ஜெயின், இந்தா் ஜெயின், லோகேஷ் மேத்தா, விஜய் தாலேடா, மகளிா் அணித் தலைவி இந்திரா கோத்தாரி, செயலா் சங்கீதா ஜெயின், பொருளாளா் மல்லிகா போரா, வா்த்தக சங்கத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட 201 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளா் எம்.தீபக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.