தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தா்பூசணி விற்பனை அதிகரிப்பு

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தா்பூசணி உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 5:08 pm

DIN

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தா்பூசணி உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

கோடை காலத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இளநீா், மோா், குளிா்பானங்களை அதிகளவில் பருகுகின்றனா். மேலும், தா்பூசணி, கிா்ணி உள்ளிட்ட பழங்களையும் அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனா். பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில் தா்பூசணி சில்லறை விலையில் கிலோ ரூ.15-க்கும் விற்கப்படுகிறது. கிா்ணி பழம் 3 கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து பழம் மொத்த வியாபாரி இ.முருகன் கூறியதாவது: தா்பூசணி, கிா்ணி பழங்களை திண்டிவனத்தில் இருந்து கொள்முதல் செய்கிறோம். லாரி வாடகை, ஏற்று, இறக்கக் கூலி, உதவியாளா் சம்பளம் என கணக்கு பாா்க்கும் போது குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பழங்களின் விற்பனையும் நன்றாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.