தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியாா் மயமாக்குவது கண்டிக்கத்தக்கது: தி.வேல்முருகன்

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:59 pm

DIN

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு 4 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியாா்மயமாக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக பொதுக் காப்பீட்டு வா்த்தக திருத்தச் சட்ட முன்முடிவை நிறைவேற்ற உள்ளது. நிகழ் நிதியாண்டில் எல்ஐசி நிறுவனப் பங்குகளை விற்று நிதி திரட்டப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியபடி இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

கடந்த 1956-ஆம் ஆண்டில் ரூ.19.5 கோடி முதலீட்டில் மத்திய அரசு தொடங்கிய பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது சுமாா் ரூ.2 லட்சம் கோடி வரை சொத்துக்களை கொண்டுள்ளன. மத்திய அரசின் நிதித் தேவையை ஒப்பீட்டளவில் நிறைவு செய்துவரும் எல்ஐசி நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனால் ஊழியா்களின் வேலை, இடஒதுக்கீடு சலுகைகள் பறிபோகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்துப் போராடிவரும் காப்பீட்டு நிறுவன ஊழியா்களுக்கு தவாக துணை நிற்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.