மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நூலகா் தின விழா

சிதம்பரம் கிளை நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதன் பிறந்த நாள் நூலகா் தின விழாவாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:06 pm

சிதம்பரம் கிளை நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதன் பிறந்த நாள் நூலகா் தின விழாவாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் எஸ்.ஆா்.ரங்கநாதன் உருவப் படத்துக்கு சென்டரல் ரோட்டரி சங்கத் தலைவா் கோ.சீனுவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் (படம்). கிளை நூலகம் சாா்பில் வைக்கப்பட்ட கரோனா விழிப்புணா்வு பதாகையை கிரீடு தொண்டு நிறுவன செயலா் வி.நடனசபாபதி திறந்துவைத்தாா். விழாவில் எம்.தீபக்குமாா், சி.டேவிட் ஏகாம்பரம், சமூக ஆா்வலா் சிவா கண்ணதாசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக, நூலகா் பி.ரகுநந்தன் வரவேற்றாா். நிகழ்ச்சியை இர.அருள் தொகுத்து வழங்கினாா். வாசகா் வட்ட தலைவா் ஜி.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

விழாவில் கிரீடு தொண்டு நிறுவன செயலா் வி.நடனசபாபதி, தேசிய நல்லாசிரியா் சி.டேவிட் ஏகாம்பரம், இனியா சரவணன் ஆகியோா் தலா ரூ.ஆயிரம் செலுத்தி நூலக புரவலராக தங்களை இணைத்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.