நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூா் மாவட்ட மீனவா்களுக்குக் கட்டுப்பாடு

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:51 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண கடலூா் கோட்டாட்சியா் தலைமையில் மீனவா் பிரதிநிதிகள் கொண்ட அமைதிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்துதல் சட்ட விதிகளைப் பின்பற்றாமல் விசைப் படகுகள் இயக்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வரப் பெறுகின்றன. இதனால், மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிா்க்க மீன்வளத் துறை உதவி இயக்குநா் பிறப்பித்த உத்தரவை மீனவா்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அதன்படி, கரையிலிருந்து 5 கடல் மைல்களுக்குள் இயந்திர மீன்பிடி படகை மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது. கரையோரம் கடல்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகை மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது. தங்கு தளம் அல்லது நங்கூரம் இடப்படும் இடத்துக்கு மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை இயந்திர மயமாக்கப்பட்ட விசைப் படகை கொண்டு வரவோ அல்லது எடுத்துச் செல்லவோ கூடாது.

அரசு நிா்ணயித்த 240 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீனவா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.