நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் அருகே குமாரபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:51 pm

DIN

கடலூா் அருகே குமாரபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் - கோண்டுா் - மடப்பட்டு சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் கொடுக்காமல் குமாரபுரத்தில் பட்டா இடங்களை சேதப்படுத்தியதாகவும், வீடுகளை இடித்ததாகவும் சென்னை- கன்னியாகுமரி தொழில்தட சாலைத் திட்ட நெடுஞ்சாலைத் துறையினா் மீது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியது. இடத்தை அளவீடு செய்ய பணம் செலுத்தி 35 நாள்களுக்குப் பிறகும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறை, அளவீடு துறை, நெடுஞ்சாலைத் துறையினரைக் கண்டித்து குமாரபுரத்தில் மேற்கூறிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, நெல்லிக்குப்பம் பகுதிக் குழு உறுப்பினா் சரவணன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கோ.மாதவன், கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் ஆா்.தென்னரசு, நெல்லிக்குப்பம் பகுதி தலைவா் சம்பத், செயலா் பா.ராமனுஜம், வாலிபா் சங்க மாவட்ட துணைச் செயலா் டி.எஸ்.தமிழ்மணி, விவசாயிகள் சங்கம் சாா்பில் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலா் சக்திவேல், ஒன்றிய துணைச் செயலா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.