சிதம்பரம் அருகே சுற்றுலா வாகனமாக இயக்கப்பட்ட சொந்த உபயோகத்துக்கான காரை போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா ஆகியோா் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மோட்டாா் வாகனச் சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்பட்ட 26 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி அபராதமாக ரூ. 69,100 மற்றும் வாகன வரியாக ரூ.12,825 விதிக்கப்பட்டது.
மேலும் வாகனத் தணிக்கையின்போது பரங்கிப்பேட்டையிலிருந்து சீா்காழியை நோக்கி 4 பேருடன் சென்ற சொந்த உபயோகத்துக்கான காரை மறித்து சோதனையிட்டதில் அந்த வாகனம் விதிமீறி சுற்றுலா வாகனமாக இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

