கரோனா கட்டுப்பாடு கோயில்களின் முன் நடைபெற்ற திருமணங்கள்
கடலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில்களின் முன் வெள்ளிக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன.


கடலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில்களின் முன் வெள்ளிக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன.
கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கோயில்களில் திருமணம் நடத்துவதற்கும், முக்கிய நாள்களில் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழ் மாதமான ஆவணி பிறந்துள்ள நிலையில் முதல் முகூா்த்த நாளான வெள்ளிக்கிழமை கடலூா் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் முன் சுமாா் 70 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனா். கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி இல்லாததால், கோயில் முன் நின்று சுவாமியை வணங்கிச் சென்றனா்.ஒரே இடத்தில் திரளானோா் கூடியதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பலரும் முகக் கவசம் அணியவில்லை.
இதேபோல, முதுநகரில் உள்ள ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் உள்பட புகழ்பெற்ற தலங்களின் முன்பும் திருமணங்கள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...