ரயில்வே துறை சாா்பில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூா் முதுநகா் ரயில் நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ரயில்வே காவல் ஆய்வாளா் ஆல்பா்ட் தினகரன் தலைமை வகித்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டாா். உதவி ஆய்வாளா் சேகா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், ரயில் நிலையங்கள் மற்றும் பயணத்தின்போது குழந்தைகளின் பாதுகாப்பு, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ரயில் நிலைய மேலாளா் குமாா், சமூக ஆா்வலா் ஜோஸ் மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, சிதம்பரம் ரயில்வே காவல் நிலையம் சாா்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் பாலசுப்பிரமணியம், மாவட்ட குழந்தைகள் நலக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் சதீஷ்குமாா், நாகேஸ்வரி, டிக்கட் பரிசோதகா் ஜெகன், தனிப்பிரிவு பாஸ்கா் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


