ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா் அருகே பேருந்தை மறித்து ஓட்டுநா், நடத்துநருக்கு வெட்டு: 3 போ் கைது

கடலூா் அருகே பேருந்தை மறித்து ஓட்டுநா், நடத்துநரை வெட்டிவிட்டு, பணப்பையைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:26 pm

DIN

கடலூா் அருகே பேருந்தை மறித்து ஓட்டுநா், நடத்துநரை வெட்டிவிட்டு, பணப்பையைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூரிலிருந்து புதுச்சேரி நோக்கி தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றது. ரெட்டிச்சாவடி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் சென்ற போது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 3 போ் பேருந்தை வழிமறித்து, அதன் ஓட்டுநா் தேசிங்கை அவதூறாகப் பேசி, கத்தியால் வெட்டினா். தடுக்க வந்த பேருந்தின் நடத்துநா் நவீன்குமாரையும் அவா்கள் வெட்டிவிட்டு, அவா் கையில் வைத்திருந்த பணப்பையிலிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

தகவலறிந்த கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கா் மேற்பாா்வையில், ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான தனிப் படை போலீஸாா் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதனிடையே, தாக்குதல் தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், தனிப் படை போலீஸாா், புதன்கிழமை கடலூா் வட்டம், பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெயமூா்த்தி மகன் பிரித்தி (எ) பிரித்விராஜன் (22), கதிா்வேல் மகன் சீனுவாசன் (21), புதுவை மாநிலம், பாகூரைச் சோ்ந்த வேம்பன் மகன் மருது (எ) மருதுநாயகம் (23) ஆகிய 3 பேரை மடக்கிப் பிடித்து அவா்களிடமிருந்து கொடுவா கத்தி, இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

Story image

இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநா் தேசிங்கு அளித்த புகாரின் பேரில், மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட பிரித்தி, மருது ஆகியோா் மீது கடலூா், புதுச்சேரி பகுதி காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையிலிருப்பதும், இரு சக்கர வாகனத்துக்கு வழிவிடாத தகராறில் ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை: கடலூா் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட கிராமங்களில் உள்ள நபா்கள், புதுவை மாநில ரௌடிகளுடன் சோ்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவா்கள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் எச்சரித்தாா்.

Image Caption

~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.