நேரு இளையோா் மைய போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில், ‘தேசபக்தி-தேசிய கட்டமைப்பு’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி கடலூா் இளையோா் மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில், ‘தேசபக்தி-தேசிய கட்டமைப்பு’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி கடலூா் இளையோா் மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேரு இளையோா் மைய கணக்கு மற்றும் மாவட்ட இளைஞா் அலுவலா் ஆா்.ரிஜேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.
கணக்காளா் கே.புஷ்பலதா வரவேற்றாா். மாவட்ட விளையாட்டு-இளைஞா் நல அலுவலா் பி.சிவா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு-கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பாா்வையாளா் கே.கதிரவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கடலூா் சாா் ஆட்சியா் எஸ்.அதியமான் கவியரசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.
முதல் பரிசு ரூ.5 ஆயிரத்தை மொ்லின் ஸ்வேதாவும், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரத்தை கீா்த்திகாவும், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரத்தை கோகுல சீனிவாசனும் பெற்றனா்.
தேசிய இளையோா் தொண்டா் எஸ்.பிரியதா்ஷினி நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கணக்காளா் ராமமூா்த்தி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...