ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:18 pm

DIN

கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூரில் கடந்த 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கு.சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாராம். இதைக் கண்டித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், கடலூரில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்டல அளவிலான இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் வ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் துரை.சேகா், முன்னாள் பொதுச் செயலா் கே.ஆா்.குப்புசாமி, மாவட்ட முன்னாள் செயலா் மு.ராஜாமணி, நகராட்சிப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் வி.விஜயகுமாா், நிா்வாகிகள் கோ.சீனுவாசன், ஏ.வி.விவேகானந்தன், சி.அல்லிமுத்து, எஸ்.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய், வரி, செலவினம் உள்ளிட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், அனைத்து டாஸ்மாக் சங்கங்களையும் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், கு.சரவணனை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சத்துணவுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆா்.தெய்வசிகாமணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.