அமைச்சா் சி.வெ.கணேசன் மனைவி காலமானாா்
தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசனின் மனைவி பவானி உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிச.9) காலமானாா்.


தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசனின் மனைவி பவானி உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிச.9) காலமானாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குடும்பத்தினருடன் வீட்டிலிருந்த பவானிக்கு வியாழக்கிழமை காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
விருத்தாசலத்திலுள்ள வீட்டில் அவரது உடலுக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன், அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
அவரது இறுதிச் சடங்கு திட்டக்குடி அருகேயுள்ள கழுதூரில் வெள்ளிக்கிழமை (டிச.10) நடைபெறுகிறது.
சி.வெ.கணேசன்- பவானி தம்பதிக்கு மகன், 4 மகள்கள். இவா்களில் மூத்த மகள் கடந்தாண்டு கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...