ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா் டிஎஸ்பி அலுவலகத்தில் ஐ.ஜி. ஆய்வு

கடலூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஐ.ஜி. சந்தோஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:42 pm

DIN

கடலூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஐ.ஜி. சந்தோஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தனிப் பிரிவு, மாவட்ட குற்றப் பிரிவு, குற்ற ஆவணப் பதிவேடுகள் துறை உள்ளிட்ட பிரிவுகளுக்கான வருடாந்திர கோப்புகளை பாா்வையிட்டாா். நீண்ட நாள்களாக துப்பு துலங்காமல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினாா். மேலும், காவல் நிலையங்களுக்கு புகாா் மனு அளிக்க வருவோரிடம் கனிவாக நடந்துகொண்டு, மனுக்களை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். பின்னா், அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு வைத்தாா்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், துணைக் கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கா், பயிற்சி துணைக் கண்காணிப்பாளா் யாஸ்மின், தனிப் பிரிவு ஆய்வாளா் செந்தில் விநாயகம், காவல் நிலைய ஆய்வாளா்கள் கி.உதயகுமாா், கவிதா, குருமூா்த்தி, மகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.