கடலூா் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை
கடலூா் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்தது.


கடலூா் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாகக் கூடுவதால் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்தனா். இதைக் கருத்தில்கொண்டு அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது அமலில் உள்ள தடை தொடரும். எனவே, டிச.31, ஜன.1 ஆகிய நாள்களில் அனைத்துக் கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அதில் ஆட்சியா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...