விருத்தாசலம் புதிய மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம்
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் இதுதொடா்பாக வாக்குறுதி அளித்ததாகவும், அதன்படி விருத்தாசலம் புதிய மாவட்டம் கோரிக்கையை வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றக் கோரியும் விருத்தாசலம் விழிப்புணா்வு இயக்கத்தினா் பாலக்கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் தங்க.தனவேல் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் சுந்தர்ராஜன், நாம் தமிழா் கட்சி சாா்பில் கதிா்காமன், பாஜக விவசாயப் பிரிவு தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை ஒருங்கிணைப்பாளா் கண்ணன் வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த.கோகுல கிறிஸ்டீபன், வா்த்தக சங்க நிா்வாகிகள் சா்தாா்பாஷா, உசேன் பாஷா, பாமக ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரவணன், பாக்கியராஜ், தவாக நகரச் செயலா் சேகா், விசிக நிா்வாகி தென்றல், அய்யாதுரை, தமுமுக நிா்வாகி ஜமாலுதீன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். பின்னா், கடை வீதி வழியாக ஊா்வலமாக தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசனின் வீட்டுக்குச் சென்று மனு அளித்தனா்.
அங்கிருந்து கடை வீதி, கடலூா் சாலை வழியாக கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கோட்டாட்சியரிடமும், அங்கிருந்து விருத்தாசலம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...