ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கடலூர்: மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் படகுகளுடன் முற்றுகை

கடலூரில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 32 மீனவர் கிராமத்தினர் படகுகளுடன் முற்றுகையிட்டனர்.

News image
கடலூர் துறைமுகத்தில் படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
Updated On :27 டிசம்பர் 2021, 9:24 am

DIN

கடலூரில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 32 மீனவர் கிராமத்தினர் படகுகளுடன் முற்றுகையிட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் சிறு விசைப்படகுகளில் இழுவலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த வகை வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை சோனங்குப்பம், அக்கரைகோரி, சித்திரைப் பேட்டை, பரங்கிப்பேட்டை உள்பட 32 மீனவர் கிராமத்தினர் படகுகளில் கருப்புக்கொடி கட்டிக் கொண்டு உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

தொடர்ந்து உதவி இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஐபி விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சந்திரன், துணை இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், மீனவர்களின் கோரிக்கை தொடர்பாக மீன்வளத்துறை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 4 நாளில் முடிவு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.