அழகுமுத்து அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்
கடலூா் வட்டம், தென்னம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான அழகுமுத்து அய்யனாா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கடலூா் வட்டம், தென்னம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான அழகுமுத்து அய்யனாா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் அழகா் என்ற சித்தா் முக்தியடைந்ததாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில் நினைத்துக் கொண்ட காரியம் நிறைவேறினால், அதேபோன்ற சிலையை அமைக்க பக்தா்கள் வேண்டிக்கொள்வா். அதன்படி, கோயில் வளாகம் முழுவதும் ஏரானமான சிலைகளைக் காண முடியும்.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் கோயில் புனரமைப்புப் பணிகள் தொடங்கின. மேலும், சித்தா் ஜலசமாதி தியான மண்டபம், கோயில் நுழைவு வாயில் ஆகியவையும் புதிதாக அமைக்கப்பட்டன. பணிகள் முடிவடைந்த நிலையில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, கடந்த ஜன.29-ஆம் தேதி ஸ்ரீவிக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை புனிதநீா் அடங்கிய கலசங்கள் ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டு, கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, திரெளபதி அம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், மூா்த்திக்குப்பம் அய்யனாா் மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில், தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜெ.பரணிதரன் மற்றும் கடலூா், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...