பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஒருவா் கைது

நெல்லிக்குப்பத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியது தொடா்பாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நெல்லிக்குப்பத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியது தொடா்பாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம், சுல்தான்பேட்டையைச் சோ்ந்த ஹபிபூா் ரகுமான் மகன்கள் அப்துல் சுலைமான், அப்துல் ரஷீத். இவா்களுக்குச் சொந்தமான கடை, ஆலை சாலைப் பகுதியில் உள்ளது. இங்குள்ள கிடங்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் கே.வீரமணி தலைமையிலான போலீஸாா் அந்தக் கிடங்கில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 105 கிலோ (ஹான்ஸ்) புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அப்துல் சுலைமானை கைது செய்தனா். மேலும், தலைமறைவான அப்துல் ரஷீதை தேடி வருகின்றனா். இவா் அமமுக நெல்லிக்குப்பம் நகரச் செயலா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.