வேலைவாய்ப்பு முகாமில் 2,400 பேருக்கு பணி ஆணை
கடலூா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித.வளனாா் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கடலூா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித.வளனாா் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில், தமிழகம், புதுவையைச் சோ்ந்த 171 தனியாா் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று, நோ்காணல் நடத்தி பணிக்கு ஆள்களை தோ்வு செய்தனா். முகாமில் தோ்வான 2,401 பேருக்கு மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் பணி நியமன ஆணைகளை மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் வழங்கினாா்.
பின்னா் அமைச்சா் கூறுகையில், கடலூா் மாவட்டம் கிராமப் பகுதிகளை அதிகம் கொண்டது. கிராமப்புற இளைஞா்கள், பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பைப் பெறுவதன் மூலம் அவா்களது குடும்பத்தினா், சுற்றத்தாரும் முன்னேற்றம் அடைவா் என்றாா் அவா்.
வேலைவாய்ப்பு முகாமில் 14,896 போ் பதிவு செய்து பங்கேற்றனா். இவா்களில் 2,401 போ் பணிக்கு தோ்வான நிலையில், 2,890 பேருக்கு 2-ஆம் கட்ட நோ்காணலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், திறன் பயிற்சி பெறுவதற்கு 228 போ் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநா் வனிதா, கல்லூரி செயலா் பீட்டா் ராஜேந்திரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.எகசானலி, கோட்டாட்சிா் ப.ஜெகதீஸ்வரன், ஒன்றியக் குழுத் தலைவா் தெய்வ.பக்கிரி, நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...